இந்தியாவிற்கு ஐநா பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவிக்கு அமெரிக்க எம்.பிக்கள் ஆதரவு


இந்தியாவிற்கு ஐநா பாதுகாப்பு சபை  உறுப்பினர் பதவிக்கு அமெரிக்க  எம்.பிக்கள் ஆதரவு
x
தினத்தந்தி 26 Sep 2017 8:14 PM GMT (Updated: 2017-09-27T01:44:30+05:30)

அமெரிக்காவின் செல்வாக்குள்ள இரண்டு ஜனநாயக கட்சி எம் பிக்கள் இந்தியாவிற்கு ஐ நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

வாஷிங்டன்

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள இத்தீர்மானத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த அமி பேராவும், இந்திய அமெரிக்க நாடாளுமன்ற கூட்டமைப்பின் நிறுவனர் பிரங்க் பல்லோன்னும் ஆகிய இருவர் முன் மொழிந்துள்ளனர்.

”அமெரிக்காவும் முன்னணி ஜனநாயக நாடுகளாகவும், பரஸ்பரம் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகின்றன. இது குறிப்பாக பாதுகாப்புத் துறையில் அதிகரித்து வருகிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஐந்து நாடுகள் மட்டுமே இருந்தன. இன்று இந்தியாவின் உலக சுபிட்சத்தில் அதிகரித்து வருகிறது. இதை நாம் அங்கீகரிக்க வேண்டியுள்ளது. உலகம் ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்தியாவிற்கு பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் தேவை” என்றார் பேரா.

உலகில் பொறுப்பற்ற நாடுகளால் ஆபத்து அதிகரித்து வரும் நேரத்தில் ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் வலுப்படுத்தும் வகையிலான ஐநா பாதுகாப்பு சபை இருக்க வேண்டும். எனவே இந்தியா அச்சபையில் இருக்க வேண்டும். இதை டிரம்ப் நிர்வாக்கத்திற்கும், உலகத்திற்கு நாடாளுமன்றம் தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. 

ஐநா துவங்கப்பட்டபோது 51 உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது 200 பேராக இருக்கிறது. ஆனால் இன்றைய மாற்றங்களை அது பிரதிபலிக்கவில்லை என்று தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஐநா சபையின் இறுதி நாளன்று இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Next Story