பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கிறது சவூதி அரேபியா


பெண்களை கார் ஓட்ட  அனுமதிக்கிறது சவூதி அரேபியா
x
தினத்தந்தி 26 Sep 2017 11:45 PM GMT (Updated: 2017-09-27T05:15:14+05:30)

சவூதி அரசு பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமையை முதன்முதலாக வழங்கவுள்ளது.

ரியாத்

இது அடுத்த கோடை காலம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

சமீபத்தில் நாட்டின் முக்கிய மைதானத்தின் அரங்கத்தில் அமர பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பெண்ணுரிமைக் கோருவோர் 1990 ஆம் ஆண்டுகளிலிருந்து பெண்கள் கார் ஓட்டும் உரிமையை வழங்கக்கோரி வருகிறார்கள்.

எனினும் பழைமைவாத மத குருமார்கள் இது சமூகத்திற்கு கெடுதல் செய்து பாவத்திற்கு வழிவிடும் என்று அவர்கள் கருதுகிறார்கள். 

பெண்களும், ஆண்களும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மன்னர் சல்மான் ஆணை வெளியிட்டதாக செவ்வாய் அன்று தொலைக்காட்சி செய்தி கூறியது. ஏற்கனவே பெண்கள் 2015 ஆம் ஆண்டில் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்படுவர் எனும் அறிவிப்பை அமெரிக்கா வரவேற்றுள்ளது.


Next Story