வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது: டொனால்டு டிரம்ப்


வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது: டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 27 Sep 2017 6:04 AM GMT (Updated: 27 Sep 2017 6:03 AM GMT)

வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு வீச்சில் தயாராக உள்ளது எனவும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வடகொரியாவை நாசம் செய்யும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

எங்கள் நாட்டை பாதுகாக்க  அமெரிக்காவின் போர் விமானங்கள், எங்கள் நாட்டு வான் எல்லைக்குள் இல்லாதபோதும்கூட, அவற்றை சுட்டுத்தள்ளும் உரிமை எங்களுக்கு உள்ளது என்று வடகொரியா கூறியிருந்த நிலையில், அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. முன்னதாக கடந்த திங்கள் கிழமை அமெரிக்கா மீது குற்றம் சாட்டிய வடகொரிய வெளியுறவுத்துறை மந்திரி ரியாங் கோ, , “எங்கள் நாட்டின் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்தான் முதலில் போர் பிரகடனம் செய்துள்ளார். இதை ஒட்டுமொத்த உலகமும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே நாங்களும் எதிர் நடவடிக்கை மேற்கொள்வதற்கு உரிமை இருக்கிறது. அமெரிக்காவின் போர் விமானங்கள், எங்கள் நாட்டு வான் எல்லைக்குள் இல்லாதபோதும்கூட, அவற்றை சுட்டுத்தள்ளும் உரிமை எங்களுக்கு உள்ளது” என்று கூறினார்.

இருநாடுகளுக்கும் இடையேயான வார்த்தைப்போர் முற்றியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இரண்டாவது ராணுவ நடவடிக்கைக்கு முழு வீச்சில் தயாராக உள்ளோம். ஆனாலும் ராணுவ நடவடிக்கை எடுப்பது என்பது முதன்மை விருப்பம் இல்லை. ஆனால், நாங்கள் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அது பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்” என்றார். 


Next Story