மாவீரன் அலெக்ஸ்சாண்டர் ஆண்ட பழமையான நகரம் கண்டுபிடிப்பு


மாவீரன் அலெக்ஸ்சாண்டர் ஆண்ட  பழமையான நகரம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 27 Sep 2017 12:03 PM GMT (Updated: 27 Sep 2017 12:15 PM GMT)

ஈராக்கில் மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ரோம்,

மாவீரன் அலெக்சாண்டர் கி.மு.356 முதல் 323 வரை ஆட்சி புரிந்தார். 20 வயதில் அரியனை ஏறி 33-வது வயதில் காய்ச்சலால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் ஈராக் நாட்டில் அலெக்ஸ்சாண்டரால் ஆட்சி செய்யப்பட்ட கலட்கா டர்பாண்ட் என்னும் நகரத்தை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் அதனை கண்டுபிடித்து உள்ளனர்.

1960ம் ஆண்டு சி.ஐ.ஏ செயற்கைக்கோள் வெளியிட்ட புகைப்படத்தில் அந்த நகரத்தின் இடிபாடுகள் தென்பட்டது. அதனை வைத்து இந்த இடத்தை தொல்பொருள் ஆராய்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து ஆராய்சியாளர்கள் பல ஆண்டுகளாக பூமியில் புதைத்திருந்த அந்த நகரத்தின் கட்டடங்களை கண்டுபிடித்தனர்.

மேலும் கிரேக்க நாணயங்கள் மற்றும் கிரேக்க ரோம கடவுள்களின் சிலைகள் ஆகியவை ஈராக்கின் குரிதிஸ்தான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

Next Story