பிளேபாய் நாளிதழின் நிறுவனர் 91வது வயதில் மரணம்


பிளேபாய் நாளிதழின் நிறுவனர் 91வது வயதில் மரணம்
x
தினத்தந்தி 28 Sep 2017 8:09 AM GMT (Updated: 2017-09-28T13:38:59+05:30)

பிளேபாய் நாளிதழின் நிறுவனர் ஹக் ஹெப்னர் தனது 91வது வயதில் மரணம் அடைந்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவில் 20ம் நூற்றாண்டின் 2வது பாதியை கவர்ச்சிமிக்க கலாசாரம் கொண்ட ஒன்றாக பிளேபாய் நாளிதழ் வெளிப்படுத்தியது.

பிளேபாய் நாளிதழை கடந்த 1953ம் ஆண்டு ஹக் ஹெப்னர் தொடங்கினார்.  

அமெரிக்காவின் கல்போர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1926ம் ஆண்டு பிறந்த அவர் பிளேபாய் நாளிதழின் பொறுப்பாசிரியராக இருந்ததுடன் தொழிலதிபராகவும் இருந்துள்ளார்.

பிளேபாய் நாளிதழில் தோன்றும் மாடல்கள் லட்சக்கணக்கான ஆண்களை வசீகரித்தனர். அமெரிக்காவில் செக்ஸ் பற்றி மிகவும் கட்டுக்கோப்புடனான எண்ணம் இருந்த காலத்தில் அதனை கிண்டல் செய்யும் வகையில் அவர் சவால் விட்டார்.

சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள பிளேபாய் மேன்சன்களில் பைப் சுருட்டு புகைத்து கொண்டும், சில்க் பைஜாமா அணிந்து கொண்டும் பல ஆண்டுகளாக விருந்துகளில் கலந்து கொள்வது வழக்கம். ஒரு பிளேபாயாகவே அவர் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த ஹெப்னர் இயற்கையாக மரணம் அடைந்து உள்ளார். இந்த தகவல் பிளேபாய் நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story