இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்: ஐ.சி.சி.யிடம் முறையிடுவோம் என புகார்


இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்: ஐ.சி.சி.யிடம் முறையிடுவோம் என புகார்
x
தினத்தந்தி 30 Sep 2017 5:12 PM GMT (Updated: 30 Sep 2017 5:12 PM GMT)

ரூ.457 கோடியை இழப்பீட்டாக தர வேண்டும், இது பற்றி ஐ.சி.சி.யிடம் முறையிடுவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.


கராச்சி,

இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் இடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட இந்திய அணி மறுத்து வருவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தநிலையில்,  ஒப்பந்தப்படி தங்களுக்குரிய இரண்டு உள்நாட்டு தொடர்களில் விளையாட மறுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.457 கோடியை இழப்பீட்டாக தர வேண்டும், இது பற்றி ஐ.சி.சி.யிடம் முறையிடுவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. ‘பொதுவான இடத்தில் போட்டியை நடத்தலாம் என்று கூறினோம். இலங்கையில் வைத்து கூட போட்டியை நடத்த முன்வந்தோம். எதற்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் செவிசாய்க்கவில்லை’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி குற்றம் சாட்டியுள்ளார்.

2012–ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி, பாகிஸ்தானுடன் நேரடி போட்டி தொடரில் விளையாடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story