உலக செய்திகள்

மலையேறும் போது பனிச்சரிவில் சிக்கி பெண் தோழி உயிரிழப்பு மனமுடைந்த காதலர் தற்கொலை + "||" + World-renowned climber watches girlfriend, 23, die in avalanche then kills himself because he ‘couldn’t save her’

மலையேறும் போது பனிச்சரிவில் சிக்கி பெண் தோழி உயிரிழப்பு மனமுடைந்த காதலர் தற்கொலை

மலையேறும் போது பனிச்சரிவில் சிக்கி பெண் தோழி உயிரிழப்பு மனமுடைந்த காதலர் தற்கொலை
மலையேறும் போது பனிச்சரிவில் சிக்கி பெண் தோழி உயிரிழந்தால் உலக புகழ்பெற்ற மலையேறும் வீரர் ஹெய்டன் கென்னடி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
நியூயார்க்,

உலக புகழ்பெற்ற மலையேறும் வீரர் ஹெய்டன் கென்னடி (வயது 27) இவரது பெண் தோழி பெர்கின்ஸ் (வயது 23) இவரும் மலையேறும் வீராங்கனை ஆவார். இந்நிலையில் இருவரும் அமெரிக்காவில்  மாண்டானா என்ற பகுதியில் உள்ள செங்குத்தான பனி மலையில் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் ஹெய்டன் கென்னடி அதிர்ஷ்டவசமாக வெளியேறி உயிர்தப்பினார். ஆனால் அவரது தோழி பெர்கின்ஸ்  சுமார் 150 அடி பள்ளத்திற்கு கீழ் புதையுண்டு பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். காதலி இறந்த துக்கம் தாளாமல் ஹெய்டன் கென்னடி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.