உலகைச் சுற்றி


உலகைச் சுற்றி
x
தினத்தந்தி 12 Oct 2017 9:30 PM GMT (Updated: 12 Oct 2017 6:49 PM GMT)

* நேபாளத்தில் அடுத்த மாதம் ஒரே நாளில் நடக்க இருக்கும் மாகாண தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசு முயற்சிப்பதாக இடதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. ஆனால் தேர்தல்களை ஒத்திவைப்பதாக எந்த ஒரு திட்டமும் இல்லை என ஆளும் கட்சி மந்திரிகள் உறுதிபட தெரிவித்து உள்ளனர்.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகிறார்கள். 200–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் நூற்றுக்கணக்கான வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே தீயில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது. தீயில் மாட்டிக்கொண்ட 42 பேரையும், 5 நாய்கள் மற்றும் ஒரு பூனையையும் ஹெலிகாப்டர் உதவியோடு வீரர்கள் உயிருடன் மீட்டனர். 

* கொலம்பியாவில் 52 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் கடந்த ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, அரசுக்கும், கிளர்ச்சியாளர்கள் அமைப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை அடுத்த 12 ஆண்டுகளுக்கு மாற்றி அமைக்கக்
கூடாது என கூறி அந்நாட்டின் அரசியலமைப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. 

* பிலிப்பைன்சில் போதை ஒழிப்பு நடவடிக்கையில் போலீசார் மனித உரிமைகளை மீறி வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், போதை ஒழிப்பு நடவடிக்கையில் இருந்து போலீசாரை நீக்கி அதிபர் ரோட்ரிகோ துதர்தே உத்தரவிட்டு உள்ளார். இனி இந்த பணியை போதைப்
பொருள் அமலாக்க பரிவு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

* லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ‌ஷவியா நகர் அருகே சேதம் அடைந்த ரப்பர் படகில் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 74 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். விசாரணையில் அவர்கள் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகள் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக லிபியாவில் குடியேற முயன்றதும் தெரியவந்து உள்ளது. 

Next Story