சவுதியின் வயதான மனிதர் 147 வயதில் மரணம்: நீண்ட ஆயுளின் ரகசியம்


சவுதியின் வயதான மனிதர் 147 வயதில் மரணம்: நீண்ட ஆயுளின் ரகசியம்
x
தினத்தந்தி 12 Jan 2018 11:23 AM GMT (Updated: 12 Jan 2018 11:23 AM GMT)

சவுதியின் வயதான மனிதர் 147 வயதில் மரணம் அடைந்துள்ளார். அவரின் நீண்ட ஆயுளின் ரகசியம் வெளியாகி உள்ளது.#Makkah #Saudi Arabia


சவுதியின் வயதான நபர் தனது 147 வயதில் உயிரிழந்துள்ள நிலையில், இத்தனை ஆண்டுகள் அவர் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. நாட்டின் அப்ஹா நகரை சேர்ந்தவர் ஷேக் அலி அல் அலாக்மி. 147 வயதான இவர் கடந்த வாரம் மூளை பக்கவாதத்தால் உயிரிழந்துள்ளார். யாருக்கும் சாத்தியமில்லாத அளவில் இவ்வளவு ஆண்டுகள் ஷேக் எப்படி வாழ்ந்தார் என்பது குறித்து அவரின் குடும்பத்தார் விளக்கமளித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், இயற்கை உணவுகளை தான் ஷேக் சாப்பிடுவார். எப்போதாவது மட்டுமே காரில் பயணிக்கும் அவர் அதிகளவில் நடப்பதையே விரும்புவார். ஒரு சமயம் அப்ஹாலிருந்து மெக்காவுக்கு (600 கிலோ மீட்டருக்கு மேல்) நடந்தே ஹஜ் பயணம் சென்றார். தனது நிலத்தில் விளையும் கரிம தானியங்கள், கோதுமை, மக்காச்சோளம், பார்லி மற்றும் தேனை தான் ஷேக் சாப்பிடுவார்.அவரின் பண்ணை விலங்குகளில் இருந்து தயாரிக்கப்படும் இறைச்சியை சாப்பிடுவதோடு பதப்படுத்தப்பட்ட உணவை எப்போதும் சாப்பிட மாட்டார் என கூறியுள்ளனர்.

Next Story