உலக செய்திகள்

எல்லையோர தாக்குதலில் பெண் சாவு: இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் + "||" + Pakistan summons Indian envoy over ‘ceasefire violation’

எல்லையோர தாக்குதலில் பெண் சாவு: இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

எல்லையோர தாக்குதலில் பெண் சாவு: இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறிய தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது.
இஸ்லாமாபாத், 

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறிய தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி அளித்து வருகின்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு நேற்று முன்தினம் இந்திய வீரர்கள் அளித்த பதிலடியில் பாகிஸ்தானின் பீர் கானா பகுதியை சேர்ந்த 65 பெண் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாகிஸ்தான் அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பொறுப்பு துணை தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறையில் தெற்கு ஆசியா மற்றும் சார்க் நாடுகளுக்கான இயக்குனராக பணியாற்றி வரும் முகமது பைசல் இந்த கண்டனத்தை பதிவு செய்தார்.

எல்லையில் இரு தரப்பும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய போதும் இந்தியா தொடர்ந்து எல்லை தாண்டிய தாக்குதல்களை நிகழ்த்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.