உலக செய்திகள்

நியூசிலாந்து பிரதமர் கர்ப்பம் வாழ்த்துக்கள் குவிகின்றன + "||" + New Zealand Prime Minister Pregnant

நியூசிலாந்து பிரதமர் கர்ப்பம் வாழ்த்துக்கள் குவிகின்றன

நியூசிலாந்து பிரதமர் கர்ப்பம்
வாழ்த்துக்கள் குவிகின்றன
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக ஊடகம் ஒன்றில் அறிவித்து உள்ளார்.
வெலிங்டன், 

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி முதல் பதவி வகித்து வருபவர், பெண் தலைவர் ஜெசிந்தா ஆர்டர்ன் (வயது 37). தொழிற்கட்சியின் தலைவரான இவர், 1856-ம் ஆண்டுக்கு பின்னர் அந்த நாட்டின் மிக இளம் வயது பிரதமர் என்ற சிறப்பை பெற்று உள்ளார். இவரது கணவர் கிளார்க் கே போர்டு, டி.வி. பிரபலம் ஆவார்.

இப்போது தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக ஊடகம் ஒன்றில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்து உள்ளார்.

இதன்மூலம் பிரதமர் பதவியில் இருந்து பிரசவிக்க போகிற இரண்டாவது பிரதமர் என்ற பெயரையும் இவர் தட்டிச்செல்லப்போகிறார். இவருக்கு முன்பாக பாகிஸ்தானில் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ, பதவிக்காலத்திலேயே 1990-ல் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

“2017-ம் ஆண்டு எங்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமையும் என்று கருதினோம்” என்று ஜெசிந்தா ஆர்டர்ன் அந்த சமூக ஊடகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

“நான் பிரதமர் ஆகப்போகிறேன் என்று தெரிந்துகொண்டதற்கு 6 நாட்கள் முன்புதான், நான் கர்ப்பம் தரித்து இருப்பது உறுதியானது. அது 100 சதவீதம் ஆச்சரியமாக அமைந்தது. நாங்கள் ஜூன் மாதம் குழந்தை பிறப்பை எதிர்பார்க்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதையடுத்து ஜெசிந்தா ஆர்டர்னுக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த நாட்டின் 2 முன்னாள் பிரதமர்களும் வாழ்த்துச்செய்தி வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.