உலக செய்திகள்

தொடர்ந்து 20 மணிநேரம் வீடியோ கேம் விளையாடிய இளைஞர் கோமா நிலைக்கு சென்றார் + "||" + ASIAChinese Gamer Paralyzed After Playing Video Games For 20 Hours Straight

தொடர்ந்து 20 மணிநேரம் வீடியோ கேம் விளையாடிய இளைஞர் கோமா நிலைக்கு சென்றார்

தொடர்ந்து 20 மணிநேரம் வீடியோ கேம் விளையாடிய இளைஞர் கோமா நிலைக்கு சென்றார்
சீனாவில் தொடர்ந்து 20 மணிநேரம் வீடியோ கேம் விளையாடிய இளைஞர் சுயநினைவின்றி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள ‘இண்டர்நெட் மையத்தில்  கடந்த மாதம் 27ஆம் தேதி இளைஞர் ஒருவர்  வீடியோ கேம்  விளையாட சென்றுள்ளார்.மாலையில் நுழைந்த அந்த இளைஞர், மறுநாள் மதியம் வரை உணவு, நீர் எதையும் எடுத்துக் கொள்ளாமல் விளையாடியுள்ளார். 

இந்நிலையில் இளைஞர் தான் அமர்ந்த இருக்கையிலேயே சுயநினைவின்றி மயங்கியுள்ளார்.இதனைத் தொடர்ந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், அவர் கோமா நிலைக்கு சென்றது தெரிய வந்தது. கேம் விளையாடுவதற்கு இடையே இளைஞர் கழிவறைக்கு மட்டுமே சென்று வந்ததாக இண்டர்நெட் மையத்தில்   இருந்தவர்கள் கூறியுள்ளனர்.  போதைப் பொருள் ஏதும் உட்கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.