காலிஸ்தான் பயங்கரவாதிக்கு அழைப்பு விடுத்தவர்கள் மீது நடவடிக்கை - கனடா பிரதமர்


காலிஸ்தான் பயங்கரவாதிக்கு அழைப்பு விடுத்தவர்கள் மீது நடவடிக்கை - கனடா பிரதமர்
x
தினத்தந்தி 22 Feb 2018 12:20 PM GMT (Updated: 22 Feb 2018 12:20 PM GMT)

டெல்லியில் கனடா தூதர் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் காலிஸ்தான் பயங்கரவாதிக்கு அழைப்பு விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கனடா தூதர் ஜஸ்டின் ட்ரூடேவ் கூறியுள்ளார். #JustinTrudeau

புதுடெல்லி

கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் சீக்கிய அமைப்பின் உறுப்பினராக இருப்பவர் ஜஸ்பால் அத்வால். இவர், 1986 ம் ஆண்டு பஞ்சாப் அமைச்சர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். இவருடன் தற்போது இந்தியா வந்துள்ள கனடா பிரதமரின் மனைவி போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், அவர் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடேவுக்கு இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடேவ் கூறியதாவது: 

உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் இந்தியா, கனடா ஆகும்; ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் கனடாவும் இந்தியாவும் உறுதியாக இருக்கிறது

காலிஸ்தான் பயங்கரவாதி ஜஸ்வால் அத்வாலை அழைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்சினை குறித்து  நாங்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறோம். பிரச்சினைக்குரிய நபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கக்கூடாது. இதற்கு காரணமான நபர் மற்றும் துறை முழு பொறுப்பேற்று கொள்ள வேண்டும் எனக்கூறினார்.

இதனிடையே, பயங்கரவாதி ஜஸ்பால் அத்வாலுக்கு இந்தியா விசா கிடைத்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது

காலிஸ்தான் பயங்கரவாதி ஒருபோதும் அழைக்கப்பட்டு இருக்கவில்லை என கனடா விளையாட்டுத்துறை மந்திரி தெரிவித்து  உள்ளார்.

Next Story