உலக செய்திகள்

இங்கிலாந்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு + "||" + Leicestershire police says 4 dead in explosion

இங்கிலாந்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு

இங்கிலாந்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு
இங்கிலாந்தில் நடந்த வெடிவிபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் காயமடைந்து உள்ளனர். #UKExplosion

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் லண்டன் அருகே லெய்செஸ்டர் நகரில் அமைந்த கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு 7 மணிக்குமேல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு பேரிடர் பொறுப்பு குழு ஆகியவை சென்றன.  வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளனர்.  காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டிடத்தின் உள்ளே பலர் சிக்கி இருக்க கூடும் என்றும் காயமுடன் யாரும் கிடக்கின்றனரா என்பதனை கண்டறிய தொடர்ந்து மீட்பு முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிவிபத்து பற்றி காவல் துறை மற்றும் லெய்செஸ்டர்ஷைர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் கூட்டு விசாரணை மேற்கொள்வர் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

வெடிவிபத்து மற்றும் தீ ஏற்பட்டதற்கான காரணம் பற்றி இன்னும் தெரியவரவில்லை.