உலக செய்திகள்

சார்ஜ் ஏற்றிக்கொண்டே பயன்படுத்தியதால் மாணவி மரணம் ; காதுக்குள் உருகிய ஹெட்போன் + "||" + Girl found dead with headphones ‘MELTED in ears’ after electric shock while using phone

சார்ஜ் ஏற்றிக்கொண்டே பயன்படுத்தியதால் மாணவி மரணம் ; காதுக்குள் உருகிய ஹெட்போன்

சார்ஜ் ஏற்றிக்கொண்டே பயன்படுத்தியதால்  மாணவி மரணம் ; காதுக்குள் உருகிய ஹெட்போன்
மொபைலுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டே பயன்படுத்தியதால் 17 வயது மாணவி உயிரிழந்து உள்ளார். காதுக்குள் உருகிய நிலையில் ஹெட்போன் இருந்துள்ளது.

பிரேசிலில் உள்ள ரியாச்சோ பிரியோ நகரை சேர்ந்தவர்  லூசியா பினஹெரியோ. இவர் தனது வீட்டின் தரையில்  உயிரற்ற நிலையில் கிடந்து உள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு   கொண்டு சென்றும் கூட, அவரை காப்பாற்ற முடியவில்லை

தனது மொபைலுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டே அதை பயன்படுத்தியது மட்டுமின்றி  அதனோடு இணைக்கப்பட்ட ஹெட்போனை காதுகளுக்குள் பொருத்தியிருந்த லூசியா மீது மின்சாரம் பாய்ந்து  உள்ளது. அது மட்டுமின்றி காதுகளில் அணிந்திருந்த ஹெட்போன் உருகிய நிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சார்ஜரில் சொருகப்பட்டிருந்த  அவரின் மொபைல் ஒரு 'பெரிய அளவிலான மின்சாரம்' மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் மழை எதுவும் பெய்யவில்லை, ஆனால் மின்னல் வெட்டுகள் இருந்தன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.