உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் பெண்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி + "||" + Saudi Arabia allows women to join the army

சவுதி அரேபியாவில் பெண்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி

சவுதி அரேபியாவில் பெண்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி
சவுதி அரேபியாவில் பெண்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி அரேபியா விஷன் 2030 என்ற தொலைநோக்குத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் சவுதி பெண்கள் ஆண்களில் அனுமதி இல்லாமலேயே தொழில் தொடங்கலாம் என்று அறிவித்திருந்தது. முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரியில் அரசின் அதிகாரப்பூர்வ முடிவுகளை எடுப்பதற்கு பெண்களுக்கு அனுமதி வழங்கியது. பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

தற்போது  பெண்களும் அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்ற அனுமதி வழங்குவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. ரியாத், மக்கா, 
அல்-குசைம் மற்றும் அல் மதினா உள்ளிட்ட மாகாணங்களைச் சேர்ந்த பெண்கள் ராணுவத்தில் சாதாரண வீராங்கனையாக சேர விண்ணப்பிக்கலாம்.

எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தையே பெரிதும் நம்பியிருக்க வேண்டிய சூழலுக்கு மாற்றாகவும் பொருளாதாரத்தை விரிவு செய்யும் நோக்கிலும் பெண்கள் பொருள் ஈட்டும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.