உலக செய்திகள்

உலகைச்சுற்றி + "||" + Around the world

உலகைச்சுற்றி

உலகைச்சுற்றி
* இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி தென் ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட வழக்கில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணும், அவருடைய நண்பரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
* பப்புவா நியூ கினியாவின் ஹைலேண்ட்ஸ் மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை. நிலநடுக்கத்தின் காரணமாக அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

* சிரியாவின் கிழக்கு கூட்டா நகரில் அரசு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் சிரிய அரசுப்படையினர் கிழக்கு கூட்டா நகரில் வான்தாக்குதல் மற்றும் ரசாயன தாக்குதலை நடத்தினர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். 

* ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ், தன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, துணை பிரதமர் பதவியையும், கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, முன்னாள் பத்திரிகையாளரான மைக்கல் மெக்கோர்மக் தேசிய கட்சியின் தலைவராகவும், துணை பிரதமராகவும் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.