உலக செய்திகள்

உலகைச் சுற்றி.... + "||" + Around the world ....

உலகைச் சுற்றி....

உலகைச் சுற்றி....
*வடகொரியாவும், அமெரிக்காவும் கூடிய விரைவில் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சீனா கேட்டுக்கொண்டு உள்ளது.
*இந்தியாவும், சீனாவும் இருதரப்பு உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும், கருத்து வேறுபாடுகளை கைவிடவேண்டும், சீன டிராகனும், இந்திய யானையும் சண்டையிடக்கூடாது, ஒருவரோடு ஒருவர் இணைந்து நடனம் ஆட வேண்டும் என்று சீன வெளியுறவு மந்திரி வாங் யி வலியுறுத்தி உள்ளார்.


*இரு தரப்பினரிடையேயான பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படுவதைப் பொறுத்துத்தான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், மெக்சிகோ அதிபர் பெனா நீட்டோவும் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று மெக்சிகோ வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.

*அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக் மாஸ்டர் உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுங் யுங் யோங்கும், உளவுத்துறை தலைவர் சூ ஹூனும் வாஷிங்டன் செல்கின்றனர்.

*வடகொரியாவை அணு ஆயுதங் களை கைவிடச்செய்வதற்கு பல தடைகள் உள்ளதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் கூறி உள்ளார்.