ராணுவம் தளம் அமைக்கும் இந்தியாவின் முயற்சிக்கு செஷல்ஸ் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை


ராணுவம் தளம் அமைக்கும் இந்தியாவின் முயற்சிக்கு செஷல்ஸ் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை
x
தினத்தந்தி 21 March 2018 3:31 AM GMT (Updated: 21 March 2018 3:31 AM GMT)

ராணுவம் தளம் அமைக்கும் இந்தியாவின் முயற்சிக்கு செஷல்ஸ் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

விக்டோரியா,

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஷெஷல்ஸ். பல்வேறு தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய அந்த நாடு,  இந்தியப்பெருங்கடல் பகுதியில் உள்ளது.  தென்னிந்தியக் கடலோர எல்லையைப் பாதுகாப்பதற்காக பல தீவுகளை உள்ளடக்கிய செஷல்ஸின் தலைநகர் விக்டோரியாவில் இருந்து தென்மேற்கு பகுதியில் சுமார் 1,135 கி.மீ. தொலைவில் உள்ள தீவில் ராணுவ தளம் ஒன்றை அமைக்க இந்தியா திட்டமிட்டிருந்தது. 

இதற்காக ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் வேளையில் இந்த ஒப்பந்தத்தை செய்துகொள்ள அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள எதிர்க்கட்சிகள்  இந்த ஒப்பந்தத்தை செய்துகொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இதனால், இந்தியாவின் முயற்சிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 


Next Story