போகோ கராம் தாக்குதலில் கடத்தப்பட்ட 100 நைஜீரியன் பள்ளி மாணவிகள் வீடு திரும்பினர்


போகோ கராம் தாக்குதலில் கடத்தப்பட்ட 100 நைஜீரியன் பள்ளி மாணவிகள் வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 21 March 2018 11:06 AM GMT (Updated: 21 March 2018 11:06 AM GMT)

போகோ கராம் தாக்குதலில் கடத்தப்பட்ட நைஜீரியன் பள்ளி மாணவிகள் 100 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், 5 மாணவிகள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. #BokoHaram #NigeriaNews

லகோஸ்,

நைஜீரியாவின் யோப் மாவட்டத்தின் டப்ஷி பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில், போகோ கராம் பகுதியின் கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பின்னர் பயங்கரவாதிகள் அங்குள்ள 100க்கும் அதிகமான மாணவிகளை கடத்திச் சென்றனர். இந்நிலையில் மாணவிகளை மீட்பதற்காக நைஜீரிய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் கடத்தப்பட்ட இஸ்லாமிய மாணவிகளில் 100 பேர் இன்று டப்ஷி பகுதிக்கு திரும்பியுள்ளனர். மாணவிகள் திரும்பி வந்ததை அவர்களின் பெற்றோர் உறுதி செய்தனர்.

”கடந்த மாதம் போகோ கராம் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட மாணவிகள், இன்று காலை 8 மணியளவில் சுமார் ஒன்பது வாகனங்களில் டப்ஷி பகுதியில் இருக்கும் பள்ளியின் வாசலின் அருகே வந்து இறங்கினர்” என கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோருக்கு ஆதரவாக செயல்படும் குழுவின் தலைவர் பசீர் மான்ஸோ கூறினார். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஐந்து மாணவிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


Next Story