தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக 7 பாகிஸ்தான் நிறுவனங்களை பட்டியலிட்டது அமெரிக்கா


தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக 7 பாகிஸ்தான் நிறுவனங்களை பட்டியலிட்டது அமெரிக்கா
x
தினத்தந்தி 26 March 2018 6:06 PM IST (Updated: 26 March 2018 6:06 PM IST)
t-max-icont-min-icon

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக 7 பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

வாஷிங்டன்,

தேசப்பாதுக்காப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் உள்ளதாக கூறி சில வெளிநாட்டு நிறுவனங்களை அமெரிக்கா அரசு தடைப்பட்டியலில் வைத்துள்ளது. அந்த வகையில், பாகிஸ்தானைச்சேர்ந்த 7 நிறுவனங்கள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் அணு வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக கூறி பாகிஸ்தானைச்சேர்ந்த 7 நிறுவனங்களை அமெரிக்கா தடை பட்டியலில் சேர்த்துள்ளது. 

அமெரிக்காவின் மத்திய பதிவகம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் மொத்தம் 23 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் நிறுவனங்களை தவிர்த்து தெற்கு சூடானைச்சேர்ந்த 15 நிறுவனங்களும் சிங்கப்பூரைச்சேர்ந்த ஒரு நிறுவனமும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் நிறுவனம் மற்றும் பாதுகாப்பு பிரிவு (BIS) இந்த பட்டியலை தயார் செய்துள்ளது. 

தற்போது அமெரிக்கா இந்த பட்டியலில் சேர்த்துள்ளதன் மூலம், குறிப்பிட்டுள்ள 23 நிறுவனங்களும் கடுமையான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி வரும். பாகிஸ்தானைச்சேர்ந்த  நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது பற்றி, பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தற்போது வரை எந்த கருத்தும் வெளியிடவில்லை. 
1 More update

Next Story