வாகா எல்லையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்களை பார்த்து சவால் விடும் சைகைகள் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்


வாகா எல்லையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்களை பார்த்து சவால் விடும் சைகைகள் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
x
தினத்தந்தி 23 April 2018 10:17 AM GMT (Updated: 23 April 2018 10:17 AM GMT)

வாகா எல்லையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்களை பார்த்து சர்ச்சை சைகைகள் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலிக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. #HasanAli

வாகா

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் தேசியக் கொடிகள் இறக்கும் நிகழ்ச்சி அந்தந்த நாடுகளின் எல்லை பகுதிகளான அட்டாரி- வாகாவில் தினசரி நடக்கும். அப்போது நடைபெறும் இருநாட்டு வீரர்களின் அணிவகுப்பை காண ஏராளமான மக்கள் கூடுவார்கள். இந்நிலையில் வழக்கம்போல கொடியிறக்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை அன்றும் நடந்தது.

பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நடக்கையில், அந்நாட்டின் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி வேகமாக அணிவகுப்புக்குகள் புகுந்தார். இந்தியாவின் எல்லைப்பகுதியை பார்த்து நின்றவர், இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு சவால் விடும் வகையில் சர்ச்சையான சைகைகளை காண்பித்தார்.

தொடர்ந்து தன்னுடைய தோளைக் காட்டியும், தொடையை தட்டியும், கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் எடுக்கும் போது இரண்டு கைகளை தூக்கிக்கொண்டு அவர் நிற்பது போல ஹசன் அலி இந்திய பாதுகாப்பு படை வீரர்களை பார்த்து கேலி செய்து அவமதித்தார்.

இவரது மொத்த செய்கையையும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் கண்டிக்காமல் ரசித்துக்கொண்டு இருந்தனர். பின்னர், கிரிக்கெட் வீரர் ஹசன் அலியை பாதுகாப்பாக அங்கியிருந்து அனுப்பி வைத்தனர்.

வாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் அவமதிக்கப்பட்ட வீடியோவை ஹசன் அலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பலரால் பார்க்கப்பட்டு தொடர்ந்து பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

ஆனால் இந்தியாவில் ஹசன் அலியின் சர்ச்சை சைகைகளுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளன. குறிப்பாக பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐஜியான முகுல் கோயல், கிரிக்கெட் வீரர் ஹசன் அலி வாகா எல்லையில் நடந்துக்கொண்டது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இருநாட்டு அணிவகுப்பிற்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது.

வீரர்களின் அணிவகுப்பு நடக்கும் போது, பார்வையாளர்கள் இருக்கும் பகுதிகளில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அணிவகுப்புக்குள் வர அனுமதியில்லை. இதன் காரணமாக விரைவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை சந்தித்து முறைப்படி புகார் அளிக்கும் என்றார் ஐஜி முகுல் கோயல்.


Next Story