சீனா அதிபரை சந்தித்தார் சுஷ்மா சுவராஜ்


சீனா அதிபரை சந்தித்தார் சுஷ்மா சுவராஜ்
x
தினத்தந்தி 23 April 2018 10:37 PM GMT (Updated: 23 April 2018 10:37 PM GMT)

சீனா அதிபர் ஜி ஜின்பிங்-ஐ வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்தார். #XiJinping #SusmaSwaraj

பெய்ஜிங்,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மந்திரிகள் கூட்டத்தில், பல்வேறு நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களுடன் சீனா அதிபர் ஜி ஜின்பிங்-ஐயும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். அந்த கூட்டத்தில் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகள் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களை பாதிக்கும் பிரச்சனைகள் பற்றி விவாதித்தார்.

முன்னதாக மாநாடு நடைபெறுவதற்கு முதல் நாள் உஸ்பெக்கிஸ்தானின் எதிர்கட்சித்தலைவர் அப்துலாஸீஸ் காமில்லோ-வை சுஷ்மா சுவராஜ் சந்திதார். வர்த்தகம் மற்றும் முதலீடு, மருந்து, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் கலாச்சாரம், பிராந்திய நிலைமை ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் இரு நாட்டுத்தலைவர்களும் இருதரப்பு நலன்களை பற்றி விவாதித்ததாக வெளி விவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.

பின்னர் சீனாவின் துணை ஜனாதிபதி வாங் கிஷனுடன் இரு நாட்டு தலைமை உயர் அதிகாரிகளையும் சுஷ்மா சுவராஜ் சந்தித்தார்.

சீனா மற்றும் மங்கோலியா ஆகிய இரு நாடுகளுக்கும் அரசு முறை பயணமாக சுஷ்மா சுவராஜ் சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்றார். 2017 ல் இந்தியா இதன் முழூ உறுப்பினர் ஆனது குறிப்பிடத்தக்கது.


Next Story