கட்டிடக் கலையில் புதிய சாதனை: 15 ஆயிரம் டன் பாலத்தை 81 டிகிரி நகர்த்தினர்


கட்டிடக் கலையில் புதிய சாதனை: 15 ஆயிரம் டன் பாலத்தை 81 டிகிரி நகர்த்தினர்
x
தினத்தந்தி 24 April 2018 12:19 PM GMT (Updated: 24 April 2018 12:19 PM GMT)

சீனாவில் கட்டிய பாலத்தின் ஒரு முனைப் பகுதியை அப்படியே திருப்பி, மற்றொரு பக்கத்துடன் பொருத்தி கட்டிடக் கலையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பிரம்மாண்ட கட்டிடங்களுக்கும், அதில் புதுமையை புகுத்துவதற்கும் பஞ்சமே இல்லை. சீனாவில் பெய்ஜிங் நகரையும், சின்ஜங் நகரையும் இணைக்கும் வகையில் 2,450 கிலோ மீட்டர் தூர நெடுஞ்சாலையில் ஹீபாய் பிராந்தியத்தில் நான்யாங்கி நகருக்கு அருகே பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

அதில் 100 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட ஒரு பகுதியை மட்டும் மற்றொரு திசையில் திருப்பி அமைக்க திட்டமிட்ட பொறியாளர்கள், அதன்படி ஏற்கெனவே கட்டப்பட்டதை 81 டிகிரி அளவில்  திருப்பி மற்றொரு பகுதியுடன்  இணைத்து வெற்றிகரமாக செய்து முடித்தனர்.  

இதற்கு வெறும் 2 மணி நேரம் தான் எடுத்துக்கொள்ளப்பட்டது. சுமார் 15 ஆயிரம் டன் எடை கொண்ட பாலத்தின் ஒரு பகுதியை சேதமின்றி திருப்பி வைத்த காட்சிகளும் அதன் பிரமிக்க வைக்கும் காட்சிகளும் இப்போது இணையத்தில் பிரபலமாக வைரலாகி வருகின்றன. 



Next Story