உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world ...

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
* மியான்மரில் மாணிக்க கல் சுரங்கத்தில் நேரிட்ட விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர்.
* அமெரிக்காவில் ஆஸ்கார் விருது வழங்கும் அகாடமியில் இருந்து பில் காஸ்பி, ரோமன் போலன்ஸ்கி ஆகிய இருவரும் நீக்கப்பட்டு உள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு காரணமாக அவர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

* அமெரிக்காவை சேர்ந்த 3 பேர் வடகொரியாவில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்புக்கு முன்னதாக நல்லெண்ண நடவடிக்கையாக வடகொரியா விடுதலை செய்தால், அதை அமெரிக்கா வரவேற்கும் என்று அமெரிக்க ஜனாதிபதியின் வக்கீல் ரூட் கிய்யுலியானி கூறி உள்ளார்.


* தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படையினரின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறு, ராணுவ தலைமையகம் பென்டகனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.