அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளி பெண், நீதிபதியாக நியமனம்


அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளி பெண், நீதிபதியாக நியமனம்
x
தினத்தந்தி 4 May 2018 10:00 PM GMT (Updated: 4 May 2018 7:43 PM GMT)

அமெரிக்க நாட்டில் வசித்து வருபவர் தீபா அம்பேகர் (வயது 41). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் நியூயார்க் நகர சிவில் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

நியூயார்க்,

நியூயார்க் நகர மேயர் பில் டி பிளேசியோ இதற்கான அறிவிப்பை  வெளியிட்டு உள்ளார்.

இவர் நியூயார்க் சிவில் கோர்ட்டில், கிரிமினல் வழக்குகளை விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவர் நியூயார்க் நகர கவுன்சிலில் 3 ஆண்டு காலம் பணி ஆற்றி உள்ளார். மூத்த வக்கீலாகவும் செயல்பட்டு வந்து உள்ளார். அத்துடன் பொதுமக்கள் பாதுகாப்புக்கான குழுவின் வக்கீலாகவும் இருந்து உள்ளார்.

சட்ட உதவி சங்கத்தின் வக்கீலாகவும் பணி ஆற்றிய அனுபவம், தீபா அம்பேகருக்கு உண்டு.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற இவர், ரூட்கர்ஸ் சட்டப்பள்ளியில் படித்து சட்டத்தில் பட்டம் பெற்றார்.

நியூயார்க் நகரில் ஏற்கனவே சென்னையை சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற பெண் நீதிபதியாக பணியாற்றி வருகிற நிலையில், நியூயார்க்கின் இரண்டாவது இந்திய வம்சாவளி நீதிபதி என்ற பெயரை தீபா அம்பேகர் பெறுகிறார்.


Next Story