வரும் மே 22-ந் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை


வரும் மே 22-ந் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 5 May 2018 1:59 AM GMT (Updated: 5 May 2018 1:59 AM GMT)

வரும் மே 22-ந் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தென்கொரிய அதிபர் மூன் ஜே-வை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். #Trump #MoonJae

வாஷிங்டன்,

வரும் மே 22-ந் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தென்கொரிய அதிபர் மூன் ஜே-வை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் இரு தலைவர்களும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பு குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

”இரண்டு தலைவர்களும் பங்கேற்கும் இந்த மூன்றாவது உச்சி மாநாட்டில் அமெரிக்க-தென்கொரிய நாடுகளுக்கிடையே நட்புறவு பலப்படும்” என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கடந்த மாதம் வடகொரியா, தென்கொரிய அதிபர்களுக்கிடையேயான நடந்த சந்திப்பில் அணு ஆயுத திட்டங்களை கைவிடுவதாகவும், நிரந்த அமைதிப்போக்கை விரும்புவதாகவும் இரு தலைவர்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் ஜூன் மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து நடத்த உள்ள பேச்சுவார்த்தைக்கு இந்த மாநாடு முன்னோட்டமாக அமைந்தது. 

இதனிடையில் வரும் மே 22-ந் தேதி நடைபெறும் அமெரிக்க-தென்கொரிய அதிபர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு குறித்த காலம் மற்றும் இடம் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story