உலக செய்திகள்

வடகொரியா ஜனாதிபதியுடன் பேசும் இடமும், தேதியும் உறுதியாகிவிட்டது: டிரம்ப் அறிவிப்பு + "||" + Trump says date, venue set for meeting with Kim Jong Un, announcement soon

வடகொரியா ஜனாதிபதியுடன் பேசும் இடமும், தேதியும் உறுதியாகிவிட்டது: டிரம்ப் அறிவிப்பு

வடகொரியா ஜனாதிபதியுடன் பேசும் இடமும், தேதியும் உறுதியாகிவிட்டது: டிரம்ப் அறிவிப்பு
வடகொரியா ஜனாதிபதியுடன் பேசும் இடம் மற்றும் தேதி உறுதியாகிவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
வடகொரியா ஜனாதிபதியுடன் பேசும் இடம் மற்றும் தேதி உறுதியாகிவிட்டது- டொனால்டு டிரம்ப்வாஷிங்டன்

பல ஆண்டுகளாக விரோதிகளாக இருந்து வந்த தென் கொரியா-வடகொரியா தலைவர்கள் சமீபத்தில் சந்தித்து பேசிக் கொண்டனர். அந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு முன்னர் இருந்தே வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக பல்வேறு நாடுகள் பரீசிலனையில் இருந்தன. அதுமட்டுமின்றி இந்த சந்திப்பு நடைபெறும் திகதி மற்றும் இடம் ஆகியவை முடிவு செய்யப்படாமல் இருந்தது. இதற்கிடையில், டிரம்ப், வடகொரியா- தென்கொரியா ஜனாதிபதிகள் சந்தித்துப் பேசிய பன்முன்ஜோம் எல்லைப்பகுதியில் உள்ள பீஸ் ஹவுஸ் என்ற கட்டிடத்தில் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை சந்தித்துப் பேச விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் டிரம்ப், வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்-னை சந்தித்துப் பேசப்போகும் தேதியும், இடமும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.