உலக செய்திகள்

ஒரே நேரத்தில் 1374 டிரோன் விமானங்களை பறக்கவிட்டு வண்ண வேடிக்கை காட்டி கின்னஸ் சாதனை + "||" + EHang Egret’s 1374 drones dancing over the City Wall of Xi’an, achieving the Guinness World Records

ஒரே நேரத்தில் 1374 டிரோன் விமானங்களை பறக்கவிட்டு வண்ண வேடிக்கை காட்டி கின்னஸ் சாதனை

ஒரே நேரத்தில் 1374 டிரோன் விமானங்களை பறக்கவிட்டு வண்ண வேடிக்கை காட்டி கின்னஸ் சாதனை
சீனாவில் ஒரே நேரத்தில் 1374 டிரோன் விமானங்களை பறக்கவிட்டு வானில் வண்ண சாகசம் நிகழ்த்தப்பட்டது கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது
சீனாவை சேர்ந்த ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் 1374 விமானங்களை பறக்க விட்டு கின்னஸ் சாத்னை நிகழ்த்தி உள்ளது.  இந்த சாகாசக் காட்சி, வானில் மின்மினிப் பூச்சிகள் நடனமாடுவதை போல பிரமிப்பாய் இருந்தது.

சியான் நகரில், இரவு நேரத்தில் வெறும் 13 நிமிடங்களில் 1374 டிரோன்கள் வண்ண விளக்குகளை ஒளிரச் செய்து அழகிய ஒளி உருவங்களை உருவாக்கியவாறு பறந்தக் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

இதற்கு முன்னதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று 156 டிரோன் விமானங்களை பறக்க விட்டதும், தென்கொரிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது 1218 டிரோன் விமானங்களை பறக்க விட்டதுமே சாதனையாக இருந்தது.