உலக செய்திகள்

கடத்தி வரப்பட்ட முதலை குஞ்சுகள் சண்டை போட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு + "||" + Fifty live crocodiles seized at Heathrow Airport, London

கடத்தி வரப்பட்ட முதலை குஞ்சுகள் சண்டை போட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு

கடத்தி வரப்பட்ட முதலை குஞ்சுகள் சண்டை போட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு
விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 50 முதலைக்குஞ்சுகள் ஒன்றையொன்று சண்டை போட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #crocodiles
லண்டன்,

மலேசியாவில் இருந்து சரக்கு விமானம் மூலம் லண்டன் ஹித்ரு விமான நிலையத்திற்கு 5 பெட்டிகள் வந்து இறங்கியது. அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு பெட்டியையும் சோதனை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் 5 பெட்டிகளில் ஏதோ சத்தம் கேட்டதை உணர்ந்தனர். உடனடியாக பெட்டியை உடைத்து பார்த்த  போது ஒவ்வொரு பெட்டியிலும் தலா 10 முதலை குஞ்சுகள் என 50 முதலை குஞ்சுகள் உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிறிய பெட்டி என்பதால் ஒன்றையொன்று சண்டை போட்டுக்கொண்டுள்ளது. இந்த சத்தமே அதிகாரிகளை சோதனையிட வைத்ததாக கூறப்படுகிறது. இந்த முதலை குஞ்சுகள் எதற்காக கடத்தி வரப்பட்டது என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு விமானத்தில் முதலை குஞ்சுகள் கடத்தி வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.