உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world ...

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
* அமெரிக்காவில் தொடர்ந்து 7 பெண்களை படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டு உள்ள தொடர்கொலை குற்றவாளி டேரன் வான் (வயது 47), தன் மீதான குற்றச்சாட்டுகளை இண்டியானா கோர்ட்டில் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றத்துடன் குற்ற ஒப்புதல் உடன்படிக்கை செய்து கொண்டதால், இவர் மரண தண்டனையில் இருந்து தப்புவார். வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

* உலகின் பல நாடுகளில் கடந்த ஏப்ரல் மாதம் வெயில் வறுத்தெடுத்து உள்ளதாக கூறுகிற ஐ.நா. சபையின் வானிலை நிபுணர்கள், பாகிஸ்தானில் உள்ள நவாப் ஷா நகரில் கடந்த 30-ந் தேதி அதிகபட்ச அளவாக 122.4 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.


* பிலிப்பைன்ஸ் தீவான கேடன்டுவானஸ்சில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இதனால் பாதிப்பு உண்டா என்பது பற்றி தகவல் இல்லை.

* மனைவி பார்பரா புஷ்சின் இறுதிச்சடங்குக்கு பின்னர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ் உடல்நலக்குறைவால் ஹூஸ்டன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கிட்டத்தட்ட 2 வார சிகிச்சைக்கு பின்னர் நேற்று முன்தினம் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

* ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த 57 ஆயிரம் அகதிகளுக்கு அளித்து வந்த பாதுகாப்பை முடித்துக்கொண்டு அவர்களை அங்கு இருந்து வெளியேற்ற டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

* அமெரிக்காவில் சி.பி.எஸ். நியூஸ் டெலிவிஷன் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த சார்லி ரோஸ் மீது பாலியல் புகார்கள் எழுந்து உள்ளன. இது தொடர்பாக நியூயார்க் கோர்ட்டில் 3 பெண்கள் வழக்குகள் தாக்கல் செய்து உள்ளனர்.