உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் வெடி விபத்து: 23 பேர் பலி + "||" + 23 dead in methane blasts at two Pakistan coal mines

பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் வெடி விபத்து: 23 பேர் பலி

பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் வெடி விபத்து: 23 பேர் பலி
பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் உள்ள குயிட்டா மாகாணத்தில் உள்ள மார்வார் பகுதியில்  சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த சுரங்கத்தில் இருந்து திடீரென வாயு கசிவு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் சிக்கினர். இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்கள் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

குயிட்டாவில் உள்ள மற்றொரு சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் 7 பேர் உயிரிழந்தனர்.  இந்த சுரங்கங்கள் பாதுகாப்பு பற்றாக்குறைக்காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு இடங்களில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மீட்பு பணி நிறைவடைந்துள்ளதாக அதிகாரி இப்திகார் அகமது தெரிவித்துள்ளார்.