உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world ...

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
* வடகொரியா மீது ஏற்படுத்திய அதிகப்படியான நெருக்கடிதான் தக்க பலனை அளித்து உள்ளதாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறுகிறது.
* மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக எழுந்து உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அந்த நாட்டு அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தி உள்ளது.

* இந்தோனேசியாவில் ஜகார்த்தா புறநகரில் உள்ள முக்கிய சிறையில் ஏற்பட்ட பிணைக்கைதி நெருக்கடி, முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டது என அந்த நாட்டின் போலீஸ் துறை அறிவித்து உள்ளது.

* ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதியில் இருந்து சிரியாவை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ.யின் புதிய தலைவராக கினா ஹாஸ்பெல் நியமனம் செய்யப்படுவதற்கு குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், செனட் எம்.பி.யுமான ஜான் மெக்கைன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவரது நியமனத்தை செனட் சபை நிராகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.