உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Five people were killed in a crash in Pakistan's 4-storey city in Peshawar

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
*பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள 4 மாடி ஓட்டலில் நடந்த வெடி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்
* அமெரிக்காவில் டெட்ராய்டு விமான நிலையத்தில் கனடாவை சேர்ந்த சீக்கிய மந்திரி நவ்தீப் பெய்ன்ஸ், தலைப்பாகையை அகற்ற வைத்து சோதனைக்கு உட்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்டுக்கொண்டு உள்ளது.

* பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள 4 மாடி ஓட்டலில் நடந்த வெடி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நேர்ந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

* வட கொரிய சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த 3 அமெரிக்க கைதிகளின் விடுதலைக்காக பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார்.

* ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியின்போது, பத்திரிகையாளர்கள் என்ற பெயரால் 8 பேரை அங்கு அழைத்துச் சென்று மாட்டிக்கொண்ட இந்திய பத்திரிகை யாளர் ராகேஷ் குமார் சர்மா, மேலும் 6 வாரம் காவலில் வைக்கப்பட்டிருப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

* சிங்கப்பூரில் ஜூன் மாதம் 12-ந் தேதி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.

* அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வணிகரீதியில் முதன்முதலாக விண்ணில் செலுத்தவிருந்த பால்கன்-9 ராக்கெட் பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்முவில் இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். #JammuLandslide
2. டெல்லியில் விஷவாயு தாக்கி 5 பேர் உயிரிழப்பு
டெல்லியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். #DelhiWorkers
3. உத்தரகாண்ட்டில் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். #UPAccident