இந்தோனேஷிய தேவாலயங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்: இருவர் பலி; 13 பேர் காயம்


இந்தோனேஷிய தேவாலயங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்:  இருவர் பலி; 13 பேர் காயம்
x
தினத்தந்தி 13 May 2018 3:28 AM GMT (Updated: 13 May 2018 3:28 AM GMT)

இந்தோனேஷியாவில் தேவாலயங்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இருவர் பலியாகி உள்ளனர். 13 பேர் காயம் அடைந்து உள்ளனர். #BombAttack

இந்தோனேஷியாவின் இரண்டாவது மிக பெரிய நகரம் சுரபயா.  உலகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்நாட்டில் மற்ற மதத்தினரும் குறைந்த அளவில் வசித்து வருகின்றனர். 

சமீப வருடங்களில் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் மீது சகிப்பின்மை காரணங்களால் தொடர் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.  சுரபயா நகரில் கிறிஸ்தவர்கள் வழிபடும் தேவாலயங்கள் அமைந்துள்ளன.

இந்த நிலையில், இந்நகரில் 3 தேவாலயங்களை இலக்காக கொண்டு அவற்றின் மீது தொடர்ச்சியாக 10 நிமிட இடைவேளையில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன.  இதில் முதல் தாக்குதல் காலை 7.30 மணியளவில் நடந்தது.

அவற்றில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் ஒன்றும் அடங்கும்.  இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர்.  13 பேர் காயமடைந்தனர்.  அவர்களில் 2 போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர்.


Next Story