உலக செய்திகள்

காபி குடிக்கிறீர்களா கர்ப்பிணிகளே? குழந்தைகள் குண்டாக பிறக்கும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் தகவல் + "||" + Drinking coffee during pregnancy leads to obese kids

காபி குடிக்கிறீர்களா கர்ப்பிணிகளே? குழந்தைகள் குண்டாக பிறக்கும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் தகவல்

காபி குடிக்கிறீர்களா கர்ப்பிணிகளே? குழந்தைகள் குண்டாக பிறக்கும் வாய்ப்பு அதிகம்:  ஆய்வில் தகவல்
காபி குடிக்கும் கர்ப்பிணிகளுக்கு அதிக எடை கொண்ட அல்லது குண்டான குழந்தைகள் பிறக்கும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. #DrinkingCoffee

சுவீடன்,

நம்மில் பலருக்கும் காலையில் தூங்கி எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும்.  ஆனால் கர்ப்பிணிகள் அதிக அளவில் காபி குடிப்பது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி சுவீடன் நாட்டில் சால்கிரென்ஸ்கா பல்கலை கழக பேராசிரியர் வெரெனா செங்பையீல் தலைமையிலான குழு ஒன்று ஆய்வு நடத்தியது.  இதற்காக 50 ஆயிரத்து 943 கர்ப்பிணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

உலக அளவில் கர்ப்பிணிகளிடம் மேற்கொண்ட மிக பெரிய சுகாதார ஆய்வில் ஒன்றாக இது கூறப்படுகிறது.  அதன்படி, காபியில் அதிகம் காணப்படும் காபீன் என்ற பொருளால் அதனை அதிகம் எடுத்து கொள்ளும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் அதிக எடை கொண்டவர்களாக அல்லது குண்டானவர்களாக பிறக்க கூடும் என தெரிவிக்கின்றது.

இதனால், குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வயதில் அதிக எடையுடன் இருப்பர்.  குறைவாக காபீன் எடுத்து கொண்ட தாய்மார்களை விட அதிக காபீன் எடுத்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு 5 வயது ஆகும்பொழுது குண்டாகும் சாத்தியம் உள்ளது.  அதிக வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும் என ஆய்வு தெரிவிக்கின்றது.

எனவே, ஒரு நாளைக்கு 300 மி.கிராம் அளவிற்கு கூடுதலான காபீனை கர்ப்பிணி பெண்கள் எடுக்க கூடாது என சுவீடனின் தேசிய உணவு கழகம் தெரிவித்துள்ளது.  இது 3 கோப்பை காபி அல்லது 6 கோப்பை பிளாக் டீ ஆகியவை எடுப்பதற்கு சமம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் திடீர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் திடீரென உயிரிழந்துள்ளன.
2. பீகார் அரசு தத்தெடுப்பு மையங்களில் பசி, தண்டனை போன்ற கொடுமைகளுடன் வாழும் குழந்தைகள்
பீகாரில் அரசு தத்தெடுப்பு மையங்களில் உள்ள சில குழந்தைகள் பசி, தண்டனை மற்றும் தகாத சொற்களால் திட்டுதல் ஆகிய கொடுமைக்கு ஆளாகின்றனர் என ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
3. ஏமனில் சவூதி கூட்டணி படை வான்வழி தாக்குதலில் 26 குழந்தைகள் பலி
ஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினரின் வான்வழி தாக்குதலில் 26 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
4. கேரளாவில் மழை வெள்ளம்: பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 100 டன் சத்துணவு பாக்கெட்டுகள்
கேரளாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 100 டன் சத்துணவு பாக்கெட்டுகளை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியது.
5. கொசுவலைக்குள் புகுந்து குழந்தைகளுடன் தூங்கிய சிறுத்தைப்புலி குட்டி
கொசுவலைக்குள் புகுந்த சிறுத்தைப்புலி குட்டி, குழந்தைகளுடன் தூங்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.