உலக செய்திகள்

இங்கிலாந்தின் 2-வது பணக்காரராக இந்துஜா சகோதரர்கள்: இந்தியாவை சேர்ந்தவர்கள் + "||" + Hinduja Brothers Named Second Wealthiest in UK's Annual Rich List

இங்கிலாந்தின் 2-வது பணக்காரராக இந்துஜா சகோதரர்கள்: இந்தியாவை சேர்ந்தவர்கள்

இங்கிலாந்தின் 2-வது பணக்காரராக இந்துஜா சகோதரர்கள்: இந்தியாவை சேர்ந்தவர்கள்
இங்கிலாந்தின் முதல் ஆயிரம் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இந்துஜா சகோதர்கள் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.
லண்டன், 

லண்டனில் உள்ள ‘சன்டே டைம்ஸ்’ பத்திரிகை இங்கிலாந்தில் உள்ள முதல் ஆயிரம் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் பிறந்து தற்போது லண்டனில் பல்வேறு வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஈடுபட்டுள்ள ஸ்ரீசந்த் இந்துஜா, கோபிசந்த் இந்துஜா என்ற இந்துஜா சகோதரர்கள் 2-வது இடத்தை பிடித்தனர்.

அவர்களின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 284 கோடி ரூபாய். கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அவர்களை பின்னுக்கு தள்ளி, இங்கிலாந்தை சேர்ந்த ரசாயன தொழிற்சாலை அதிபர் ஜிம் ராட்கிளிப் ஒரு லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் முதலிடத்தை பிடித்தார். பணக்காரர்கள் பட்டியலில் உள்ள ஆயிரம் பேரில் 47 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.