சீனாவில் முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம்தாங்கி போர்க்கப்பல், கடல் சோதனை தொடங்கியது


சீனாவில் முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம்தாங்கி போர்க்கப்பல், கடல் சோதனை தொடங்கியது
x
தினத்தந்தி 13 May 2018 11:30 PM GMT (Updated: 13 May 2018 8:35 PM GMT)

சீனா, முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டிய விமானம்தாங்கி போர்க் கப்பல், டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டு சென்றது

பீஜிங், 

சீனாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் இருந்து வந்தது. இந்த நிலையில், இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி உள்ளது.

இந்த கப்பல் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு லயோனிங் மாகாணத்தில் உள்ள டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது.

கடல் சோதனை, பயிற்சிகளுக்கு பின்னர் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல், 2020-ம் ஆண்டுக்கு முன்பாக அந்த நாட்டின் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்படும்.

சீனா 3-வதாக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை ஷாங்காயில் வடிவமைத்து கட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் 4 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பெற்றிருக்க வேண்டும் என்று சீனா திட்டமிட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே இந்தியா, அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிடம் தான் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இந்த நாடுகள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 18 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.

Next Story