உலக செய்திகள்

இளவரசர் ஹாரி- அமெரிக்க நடிகை திருமணம்: இங்கிலாந்து ராணி சம்மதம் தெரிவித்தார் + "||" + Royal Wedding 2018: Queen consents to Harry and Meghan's marriage

இளவரசர் ஹாரி- அமெரிக்க நடிகை திருமணம்: இங்கிலாந்து ராணி சம்மதம் தெரிவித்தார்

இளவரசர் ஹாரி- அமெரிக்க நடிகை திருமணம்: இங்கிலாந்து ராணி சம்மதம் தெரிவித்தார்
இளவரசர் ஹாரி- அமெரிக்க நடிகை மேகன் மார்கிளே திருமணத்துக்கு இங்கிலாந்து ராணி சம்மதம் தெரிவித்துள்ளார்.
லண்டன், 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேரனும், இளவரசர் சார்லசின் இளைய மகனுமான இளவரசர் ஹாரி, பிரபல அமெரிக்க நடிகை மேகன் மார்கிளேயை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இருவரும் அரச குடும்ப பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ளப் போவதாக அண்மையில் தகவல்கள் வெளியாயின.

எனினும் இதுபற்றி 92 வயது ராணியிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. ஏனென்றால் இங்கிலாந்து அரச குடும்பத்தில் அரியணை ஏறத் தகுதியுள்ள முதல் 6 பேர் ராணியின் சம்மதத்தை பெற்றால்தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராணி எலிசபெத், பேரனின் திருமண முடிவுக்கு நேற்று அதிகாரப்பூர்வமான முறையில் அங்கீகாரம் அளித்தார். இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ராணி எலிசபெத் கையெழுத்துடன் கூடிய அறிவிப்பு ஆவணம் வெளியிடப்பட்டது.

அதில், வருகிற 19-ந் தேதி பெர்க்ஷையர் ‘வின்சர்’ அரண்மனையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில், 33 வயது ஹாரிக்கும் நடிகை மேகன் மார்கிளேவுக்கும்(37) திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது.