காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பாலஸ்தீனியர்கள் பலி


காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பாலஸ்தீனியர்கள் பலி
x
தினத்தந்தி 14 May 2018 12:10 PM GMT (Updated: 14 May 2018 12:10 PM GMT)

இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான காஸாமுனை எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர். #Gazaprotest

காஸா நகரம்,

இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியத்திற்கும் இடையேயான காஸாமுனை எல்லைப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அமெரிக்க தலைமை தூதரக இட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காஸாமுனை எல்லை பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது கற்களை வீசியும், பாதுகாப்பு வேலியை தகர்த்தெறிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதால் இஸ்ரேலிய ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 16 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் காஸாமுனையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பாதுகாப்பு பணியில் இஸ்ரேலிய ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story