பாகிஸ்தான்: சாலை விபத்து ஏற்படுத்திய அமெரிக்க தூதரக அதிகாரி நாடு திரும்ப அனுமதி


பாகிஸ்தான்: சாலை விபத்து ஏற்படுத்திய அமெரிக்க தூதரக அதிகாரி நாடு திரும்ப அனுமதி
x
தினத்தந்தி 15 May 2018 1:51 AM GMT (Updated: 15 May 2018 1:51 AM GMT)

பாகிஸ்தானில் சாலை விபத்து ஏற்படுத்திய அமெரிக்க தூதரக அதிகாரி நாடு திரும்ப பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.


இஸ்லமபாத், 

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றியவர்  ராணுவ இணைப்பு அதிகாரி காலினல் ஜோசப் இமானுவேல் ஹால். இவர் கடந்த ஏப்ரல் 7 ம் தேதி இஸ்லாமாபாத்தின் வடக்கு பகுதியில்,  காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளில், ஹாலின் கார் மோதியது. இந்த விபத்தில் அடீக் பெய்க் என்ற இளைஞர் உயிரிழந்தார். சிக்னல் விதிகளை மதிக்காமல், ஹால் வாகனம் ஓட்டிச்சென்றதாலே விபத்து நேரிட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இருப்பினும், துதரக சலுகை பெற்று இருப்பதால், ஹால் கைது செய்யப்படவில்லை. 

ஹாலை கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்தது. இதையடுத்து, அதிகாரியை அழைத்து செல்ல அமெரிக்கா விமானம் ஒன்றை அனுப்பியது. ஆனால், இமானுவேல் ஹால், செல்வதற்கான அனுமதியை பாகிஸ்தான் அரசு அளிக்கவில்லை. இதனால், இரு நாடுகளுக்கு இடையே இந்த விஷயத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், தூதரக அதிகாரியான ஹால்,அமெரிக்கா செல்வதற்கான அனுமதியை பாகிஸ்தான் அளித்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். 


Next Story