உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world ...

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
* எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலியாகினர்.
* அமெரிக்காவில் ‘கிரிப்டோகரன்சி’ என்றழைக்கப்படுகிற இணைய பண நிறுவனத்தை சோரப் சர்மா என்ற இந்தியர், மேலும் 2 பேருடன் சேர்ந்து நடத்தி வந்தார். ஆனால் முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்கத்தில் அவர்கள் இந்த நிறுவனத்தை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர்களது நிறுவனத்தில் இருந்து 60 மில்லியன் டாலர் (சுமார் ரூ.402 கோடி) இணைய பணம் கைப்பற்றப்பட்டது.


* வட கொரியா, புங்கியே-ரி அணு ஆயுத சோதனை தளத்தை வரும் 23-ந் தேதி தொடங்கி 25-ந் தேதிக்குள் ஒரு நாள், அழிக்க திட்டமிட்டு உள்ளது. இதை நேரில் பார்வையிட வருமாறு தென் கொரிய பத்திரிகையாளர்களை அழைக்க முடிவு செய்து உள்ளது.

* பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த கர்னல் ஜோசப் ஹால், அங்கு விபத்து ஏற்படுத்தி பாகிஸ்தானியர் ஒருவரை கொன்று விட்டார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை அங்கிருந்து வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா இதில் தலையிட்டது. அந்த அதிகாரி மீது அமெரிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தது. இதையடுத்து அவர் அமெரிக்கா திரும்ப, பாகிஸ்தான் அனுமதித்தது. அவர் அமெரிக்கா திரும்பி விட்டார்.

* அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், ஓக்லாண்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் 3.8 புள்ளிகளாக பதிவானது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பதற்றத்தில் கட்டிடங்களை விட்டு வெளியேறினர். 


தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
பிஜி மற்றும் டோங்கா ஆகிய நாடுகளுக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. உலகைச்சுற்றி...
* வட கொரியா இன்னும் அணுசக்தி பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கூறுகிறார்.
3. உலகைச்சுற்றி...
* தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், ராட்சத பாறாங்கல் ஒன்றின் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. உலகைச்சுற்றி...
* வடகொரியாவுடனான அமெரிக்க ஒப்பந்தம், சீனாவுக்கு நல்லதாக அமையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.
5. உலகைச்சுற்றி...
* துருக்கி நாட்டின் இஸ்தான்புல், இஜ்மிர் நகரங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிற 18 பேரை போலீசார் கைது செய்தனர்.