உலக செய்திகள்

இந்தோனேஷியாவில் போலீஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் பலி + "||" + Indonesian police headquarters attacked

இந்தோனேஷியாவில் போலீஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் பலி

இந்தோனேஷியாவில் போலீஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் பலி
இந்தோனேஷியாவின் ரீயா மாகாணத்தில் உள்ள போலீஸ் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சுராபயா,

இந்தோனேஷியாவின் ரியா மாகாணத்தில் உள்ள போலீஸ் தலைமையகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.  இதில் 3 பேர் உயிரிழந்தனர்.  இது தொடர்பாக இந்தோனேசியா செய்தி நிறுவனம் ஆன்டாரா வெளியிட்ட தகவலின் படி,  போலீஸ் நிலையத்தின் தலைமையகம்  நுழைவுவாயிலில் மர்ம நபர்கள் ஓட்டி வந்த கார் போலீஸ் அதிகாரிகள் மீது பயங்கரமாக மோதியது.

தாக்குதல் நடத்தியவர்களின் எண்ணிக்கை குறித்து தெரியவில்லை. இறந்தவர்களில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான குண்டு வெடிப்பை நடத்தியவர் என்பது தெரியவந்துள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் வெளியேறும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த தாக்குதலில் 2 பத்திரிக்கையாளர்கள் காயமடைந்தனர்.  தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் சுராபயாவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில்  தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 10 பேர் காயமடைந்தனர்.