புகழ்பெற்ற நிர்வாண ஓவியம் ரூ.1065 கோடிக்கு ஏலம் போனது


புகழ்பெற்ற நிர்வாண ஓவியம் ரூ.1065 கோடிக்கு ஏலம் போனது
x
தினத்தந்தி 16 May 2018 9:49 AM GMT (Updated: 16 May 2018 9:51 AM GMT)

ஆரம்ப காலத்தில் ஆபாசம் என ஒதுக்கித் தள்ளப்பட்ட புகழ்பெற்ற நிர்வாண ஓவியம் ஒன்று 157 மில்லியன்(ரூ.1065 கோடி) டாலர் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சொதேபி  நிறுவனம் நூ கூச்சே (Sur Le Cote Gauche) என்ற ஓவியத்தை விற்பனைக்கு வைத்தது.

அந்த ஓவியமானது புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரான அமேதியோ மோதிக்லியானியால் உருவாக்கப்பட்ட 22 நிர்வாண ஓவியத் தொகுப்பில் ஒன்றாகும்.

1917-ஆம் ஆண்டு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஒவியமானது அப்போதைய மக்களால் ஆபாசம் என ஒதுக்கப்பட்டது. ஏலத்திற்கு வைத்த சொதேபி நிறுவனமானது ஆரம்ப விலையாக 150 மில்லியன் டாலர் என குறிப்பிட்டது. இதுவரை ஏலத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்களில் ஆரம்ப விலையாக அதிக தொகை நிச்சயிக்கப்பட்ட ஓவியமும் இதுவே. பின்னர் நடந்த ஆவேசமான விவாதத்தில் குறித்த ஓவியத்தை பெயர் வெளிப்படுத்த விரும்பாத நபர் ஒருவர் 157 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்.

ஆனால் இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக டாவின்சி ஓவியமான சல்வெட்டர் முண்டி( Salvator Mundi) உள்ளது. கடந்த ஆண்டு ஏலத்தில் விற்கப்பட்ட இந்த ஓவியத்தின் மொத்த தொகை 450 மில்லியன் டாலர் ஆகும். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நூ கூச்சே  (Sur Le Cote Gauche) என்ற நிர்வாண ஓவியத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவே பலத்த எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story