உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world ...

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
* சிரியாவில் கிழக்கு ஹமா பகுதியில் அதிபர் பஷார் அல் ஆசாத் படையினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் சிக்கி அப்பாவி மக்கள் 5 பேர் பலியாகி உள்ளனர்.
* வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மேல்முறையீடு செய்த நிலையில் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அவருக்கு ஜாமீன் வழங்கும் ஐகோர்ட்டு உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து உள்ளது.

* இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபாலின் சகோதரி சுசீலா ஜெயபால், ஒரேகான் மாகாணம், முல்டோமான் கவுண்டியில் ஆணையர் வாரியத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்தப் பதவிக்கு அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள முதல் தெற்காசியர் இவர் தான்.

* உக்ரைனில் இருந்து பிரிந்த கிரிமியாவை ரஷியா தன்னுடன் சேர்த்துக் கொண்டது. இப்போது கிரிமியாவுடன் ரஷியா பாலம் அமைத்து உள்ளது. அந்தப் பாலத்தை ரஷிய அதிபர் புதின் திறந்து வைத்தார். கிரிமியாவை ரஷியா இணைத்துக் கொண்டது சட்டவிரோத செயல் என்று அமெரிக்கா கூறி, பால திறப்புக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.

* இஸ்லாமாபாத் நகரில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நடந்து வருகிற 3 ஊழல் வழக்குகளில், அவன்பீல்டு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் நாளை (வெள்ளிக்கிழமை) வாக்குமூலம் அளிக்கின்றனர்.