உலக செய்திகள்

எத்தியோப்பியாவில் சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தின் இந்திய மேலாளர் சுட்டு கொலை + "||" + Top Indian executive of cement company gunned down in Ethiopia

எத்தியோப்பியாவில் சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தின் இந்திய மேலாளர் சுட்டு கொலை

எத்தியோப்பியாவில் சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தின் இந்திய மேலாளர் சுட்டு கொலை
எத்தியோப்பியா நாட்டில் சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தின் இந்திய மேலாளர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். #CementCompany

அடிஸ் அபாபா,

எத்தியோப்பியா நாட்டில் நைஜீரியா நாட்டை சேர்ந்த டங்கோட் என்ற சிமெண்ட் உற்பத்தி நிறுவனம் உள்ளது.  இதன் மேலாளராக இருந்தவர் தீப் கம்ரா.

அவர் தொழிற்சாலையில் இருந்து அடிஸ் அபாபா நகருக்கு வாகனம் ஒன்றில் திரும்பி கொண்டு இருந்துள்ளார்.  அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.  இந்த சம்பவத்தில் வாகன ஓட்டுநர் மற்றும் கம்ராவின் செயலாளர் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.  அவர்கள் இருவரும் எத்தியோப்பியர்கள்.

கடந்த 2015ம் ஆண்டில் டங்கோட் சிமெண்ட் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டது.  இது ஆப்பிரிக்கா மற்றும் நைஜீரியா நாட்டிற்கு வெளியே என 10 இடங்களில் உற்பத்தி நிறுவனங்களை நிறுவியுள்ளது.  எத்தியோப்பியாவின் மிக பெரிய சிமெண்ட் உற்பத்தி ஆலையாக இது உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. புலி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: அரசு மீது சிவசேனா கடும் தாக்கு
புலி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அரசை சிவசேனா கடுமையாக தாக்கி பேசியுள்ளது.
2. காஷ்மீரின் வடக்கே பாதுகாப்பு படை தாக்குதல்; 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரின் வடக்கே பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
3. பாகிஸ்தானில் பாடகி ரேஷ்மா கணவரால் சுட்டு கொல்லப்பட்டார்
பாகிஸ்தானில் பாடகி ரேஷ்மா தனது கணவரால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.