நியூயார்க் காவல் துறையில் தலைப்பாகையுடன் முதல் சீக்கிய பெண் அதிகாரி


நியூயார்க் காவல் துறையில் தலைப்பாகையுடன் முதல் சீக்கிய பெண் அதிகாரி
x
தினத்தந்தி 20 May 2018 8:33 AM GMT (Updated: 20 May 2018 8:33 AM GMT)

அமெரிக்காவில் நியூயார்க் காவல் துறையில் துணைநிலை அதிகாரி பதவிக்கு தலைப்பாகையுடன் சீக்கிய பெண் ஒருவர் முதன்முறையாக பணி அமர்த்தப்பட்டு உள்ளார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் காவல் துறையின் அகாடெமியில் பயின்று வந்தவர் குர்சோச் கவுர்.  இவர் கடந்த வாரம் தனது படிப்பினை முடித்து வெளியேறினார்.

அவருக்கு துணை நிலை காவல் அதிகாரி பதவி வழங்கப்பட்டு உள்ளது.  இதுபற்றி சீக்கிய அதிகாரிகளுக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நியூயார்க் காவல் துறையில் முதல் தலைப்பாகையுடன் கூடிய பெண் துணைநிலை காவல் அதிகாரியை நாங்கள் வரவேற்கிறோம்.  இதற்காக நாங்கள் பெருமை கொள்கிறோம்.  பாதுகாப்புடன் இருக்கவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டில் நியூயார்க் காவல் துறை சீருடை கொள்கையில் தளர்வு செய்து சீக்கிய அதிகாரிகள் தலைப்பாகை அணியவும் மற்றும் தாடியை வளர்க்கவும் அனுமதி வழங்கியது.

Next Story