உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 20 May 2018 10:00 PM GMT (Updated: 20 May 2018 7:55 PM GMT)

* காஷ்மீர் மற்றும் பாலஸ்தீனம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இயற்றிய தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் குரல் கொடுத்து உள்ளது.

* இங்கிலாந்தில் வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்ற இளவரசர் ஹாரி, மேகன் ஜோடியின் திருமண விழாவில் உலகம் எங்கும் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கு ராணியின் குடும்பம் நன்றி தெரிவித்துக்கொண்டு உள்ளது.

* சிரியாவில் கடைசியாக டமாஸ்கஸ் நகரின் தெற்கு பகுதியில் வலுவாக இருந்து வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முதல் குழுவினர் நேற்று அதிகாலை அங்கு இருந்து வெளியேறினர். அவர்கள் 6 பஸ்களில் சிரிய பாலைவனத்திற்கு கிழக்கே உள்ள பகுதிக்கு சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.

* அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் மலைப்பகுதியில் வீரசாகசமாக சைக்கிள் ஓட்டிய 2 பேரை காட்டு சிங்கம் தாக்கியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

* அமெரிக்கா- சீனா இடையே உருவான வர்த்தக போர் மேகம் கலை கிறது. அமெரிக்காவில் இருந்து கூடுதல் பொருட்களை இறக்குமதி செய்ய சீனா முன்வந்து உள்ளது. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story