சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் மரணத்தில் நிலவிய சர்ச்சைக்கு முடிவு


சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் மரணத்தில் நிலவிய சர்ச்சைக்கு முடிவு
x
தினத்தந்தி 21 May 2018 6:17 AM GMT (Updated: 21 May 2018 6:17 AM GMT)

யூத மக்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருந்த ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் மரணத்தில் இதுவரை நிலவி வந்த சர்ச்சைக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. #Hitler


1945 ஆம் ஆண்டு பெர்லின் பதுங்கு குழியில் தனது காதலி ஈவா பிரயுனுடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகிவிட்டார் எனவும் இருவேறு தகவல்கள் நிலவி வந்தன. அவர் தற்கொலை செய்யவில்லை. நீர்மூழ்கி கப்பல் மூலம் அர்ஜென்டினாவுக்கு தப்பி சென்றார். அண்டார்டிகா அல்லது வேறு பகுதிக்குச் சென்று தலைமறைவாகிவிட்டார் என்ற சர்ச்சையும் உள்ளது.

இந்நிலையில், அவரது மரணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில்,பிரான்சை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர் சார்லியர் மற்றும் 4 நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பதுங்கு குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓட்டில் இருந்த பல் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இடதுபுறத்தில் துப்பாக்கி குண்டு துளைத்த அடையாளம் உள்ளது. எனவே, ஹிட்லர் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி பெர்லினில் தற்கொலை செய்துகொண்டார், அவர் எங்கும் தப்பி செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், அவர் ஒரு சைவப்பிரியர் எனவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Next Story