நிலவின் மறு பக்கத்தை ஆராயப்போகும் சீனா


நிலவின் மறு பக்கத்தை ஆராயப்போகும் சீனா
x
தினத்தந்தி 21 May 2018 11:50 AM GMT (Updated: 21 May 2018 11:50 AM GMT)

நிலவின் இருளான மறு பக்கத்தை ஆராய இரண்டு வருடங்களுக்குள் விண்கலம் ஒன்றை சீனா அனுப்ப உள்ளது.

பெய்ஜிங்:

நிலவின் இருளான மறு பக்கத்தை ஆராய சீன விண்வெளி ஆய்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக தற்போது பூமியில் இருந்து  செயற்கைகோள் ஒன்றை அனுப்பியுள்ளது.

 சூரிய ஒளியை பிரதிபலிக்க முடியாத காரணத்தால் நிலவின் மறுபக்கம் முழுக்க முழுக்க இருளாக இருக்கும். இந்த இருளான பகுதியில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக சீனா களத்தில் இறங்கியுள்ளது.

இதற்காக இன்னும் இரண்டு வருடங்களுக்குள் விண்கலம் ஒன்று அனுப்ப உள்ளது. இந்த விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் மிக அருகில் சென்று ஆராய்ச்சி செய்யும். இது நிலவின் பின்பக்கத்தை மட்டுமே ஆராய்ச்சி செய்யும். அங்கு இருக்கும் தட்பவெப்ப நிலைகளை கருத்தில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டு வருகிறது. இப்போது 70 சதவிகித பணிகள் முடிந்து இருப்பதாக சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.

ஆனால் நிலவின் பின்பக்கத்தில் இருந்து நேரடியாக பூமியை தொடர்பு கொள்வது கடினம் என்று கூறப்படுகிறது. இப்போது சீனாவின் கைவசம் இருக்கும் செயற்கை கோள்களை வைத்துக்கொண்டு நிலவின் பின்பக்கம் அவ்வளவு எளிதாக ஆராய்ச்சி செய்து முடிவுகளை பூமிக்கு உடனுக்குடன் அனுப்ப முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக சீனா வேறு ஒரு திட்டம் ஒன்றை போட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

தற்போது சீனா மேக்பை பிரிட்ஜ் என்ற செயற்கை கோளை விண்ணில் ஏவியுள்ளது. பூமியில் இருந்து 4,55,000 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த செயற்கைகோள் சுற்றும். இதுவரை எந்த செயற்கைகோளும் இவ்வளவு தூரத்தில் சுற்றியதே இல்லை. இதன் மூலம் நிலவை சுற்றும் செயற்கைகோளுடன் தொடர்பு கொண்டு பூமியுடன் தகவல் பரிமாற முடியும். இது இணைப்பு பாலம் போல செயல்படும் என்பதால் பிரிட்ஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Next Story